கொடைக்கானல்:மதுரை மாவட்டத்தில் முன்பு இருந்த கொடைக்கானல் இப்போது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது. ஊட்டிக்கு அடுத்து தமிழகத்தில் உள்ள இரண்டாவது பெரிய சுற்றுலா மலைவாசஸ்தலம் (7000 அடி உயரம்). மதுரையிலிருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்களை கொடைக்கானலில் காணலாம். கோக்கர்ஸ் வாக், ஏரி, தற்கொலைப் பள்ளத்தாக்கு, குறிஞ்சியாண்டவர் கோவில் என கொடைக்கானலுக்கு அணி செய்பவை பல.Published in கொடைக்கானல்வைகை அணை
வைகை அணை:மதுரையிலிருந்து 65 கிலோமீட்டர் தூரத்தில் வைகை அணை உள்ளது. சிறந்த சுற்றுலாஸ்தலமாகும்.Published in வைகை அணைதிருமலை நாயக்கர் மஹால்
திருமலை நாயக்கர் மஹால்திருமலை நாயக்கர் மன்னரால் கட்டப்பட்ட சிறப்பான கட்டடங்களுள் இதுவும் ஒன்று. மீனாட்சி அம்மன் கோவிலிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. தற்போது உள்ள மஹால், அப்போது திருமலை மன்னர் வாழ்ந்த பகுதியின் ஒரு பகுதியே. பல பகுதிகள் காலப்போக்கில் அழிந்து விட்டன. சொர்க்கவிலாசம் மற்றும் ரங்க விலாசம் என இரு பகுதிகளைக் கொண்டது மஹால்.மஹாலில், தலில் நுழைந்ததும் தென்படுவது,அரண்மனை தர்பார் மண்டபம். இங்கிருந்துதான் திருமலை மன்னர் மதுரையை ஆண்டு வந்தார். தினசரி நடனம் மற்றும் இசை நிகழ்ச்சிகள் இங்கு நடைபெறும். நவராத்திரி விழா,சித்திரைத் திருவிழா, மாசி விழா,தெப்பத் திருவிழா ஆகியவற்றை திருமலை நாயக்கர் நடத்தி வந்தார்.1822-ம் ஆண்டு இங்கிலாந்து ஆட்சிக் காலத்தில் நேப்பியர் மன்னர், மஹாலை புணரமைத்து,அதன் ஒரு பகுதியில் மாவட்ட நீதி மற்றும் நிர்வாக அலுவலகங்களை ஏற்படுத்தினார்.தமிழக அரசின் தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இப்போது,மஹால் உள்ளது. தினசரி காலை9 மணி தல் மாலை 5 மணி வரை மஹாலைச் சுற்றிப் பார்க்கலாம். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒலி, ஒளிக் காட்சியும் இங்கு உண்டு. திருமலை நாயக்கர் வரலாறு,கண்ணகி வரலாறு இதில் இடம் பெறும்.Published in திருமலை நாயக்கர் மஹால்அழகர் கோவில்அழகர் கோவில்வைணவர்களின் புனிதத் தலமாக மதுரை அருகே,மேற்குத் தொடர்ச்சி மலையில்,தொட்டில் போல உள்ள அழகர் மலை எனப்படும் அழகர் கோவில் விளங்கி வருகிறது.சிற்ப கலையின் சிறப்புக்கு சரியான உதாரணமாக, கோவில் உள்ள முகப்பு மண்டபத்திலும்,மற்ற மண்டபங்களின் தூண்களிலும் உள்ள சிற்பங்கள் உள்ளன.சங்க காலத்திலிருந்தே சிறப்பு பெற்று வரும் இத்தலத்தை பற்றி ஆழ்வார்கள் தங்கள் பாடலில் குறிப்பிட்டுள்ளனர். நக்கீரர் உள்பட பல புலவர்கள் அழகர் கோவிலைப் பற்றி பல பாடல்கள் இயற்றியுள்ளனர்.அழகர் கோவிலில்,பெருமாள், சுந்தரராஜராக எழுந்தருளி மக்களுக்கு அருள் பாலிக்கிறார்.இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில், அழகர் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள அழகர் கோவில், பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது. கோவிலைச் சுற்றி உள்ள மலைகளும், இயற்கை காட்சிகளும், நிலவும் அமைதியான சூழ்நிலையும்,பெருமாளைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு திவ்யமான நிம்மதியைத் தரக் கூடியதாக உள்ளது.
கிபி 1251 முதல் 1563வரைபாண்டியர்களின் சிற்ப கலைக்கு எடுத்துகாட்டாக விளங்கும் இந்த கோவிலை குலசேகர பாண்டியனின் மைந்தனான மலையத்துவஜா பாண்டியன் புதுப்பித்தான்.கிபி 1251 முதல் 1270 வரை ஆண்ட ஜடாவர்மன் சுந்தர பாண்டியன், கோவிலுக்கு பொன்னாலான விமானத்தை அமைத்தான். அதன் பின்னர் விஜயநகர சாம்ராஜ்யத்தின் கீழ் மதுரை வீழ்ந்தபோது,கிருஷ்ணதேவராயன் இந்த கோவில் புணரமைப்பு பணிகள் செய்து ஆண்டு தோறும் திருவிழாக்கள் நடத்த ஏற்பாடு செய்தான்.நாயக்கர்கள் ஆட்சியின் கீழ் மதுரை வந்தபோது, அழகர் கோவிலுக்கு பின்னடைவு ஏற்படவில்லை. பாண்டிய,விஜயநகர மன்னர்களைப் போல நாயக்க மன்னர்களும் அழகர் கோவிலைப் போற்றி பராமரித்தனர்.கிபி 1558 முதல் 1563 வரை ஆண்ட விஷ்வநாத நாயக்க மன்னன் இந்த கோவிலில் பல திருப்பணிகளை செய்தார்.இந்த கோவிலின் முக்கிய தெய்வமாக கருதப்படும் பரமஸ்வாமி சிலையும்,சுந்தரராஜ பெருமாளான கள்ளழகர் சிலையும் தங்கத்தினால் செய்யப்பட்டதாகும். இது பழங்கால கைவேலைப்பாடுக்கான சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
ஆண்டாள் பெருமானை தரிசித்த தலம்பெருமாளுக்கு வலப்புறமாக கல்யாண சுந்தரவல்லியும், இடப்புறமாக ஆண்டாளும் காட்சி தருகிறார்கள். ஆண்டாள் ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து தன் தந்தை பெரியாழ்வாருடன் இத்தலத்திற்கு வந்து பெருமானை தரிசித்ததாக புராணங்கள் கூறுகின்றன.கோவிலில், சுதர்சனனார்,யோக நரசிம்மர், கருப்பசாமி ஆகியோருக்கு தனித்தனி கருவறைகள் இருப்பது இத்தலத்தின் சிறப்பம்சமாகும். கடைசியாக பெருமான் சந்நதி உள்ளது. இங்கே வரும் பக்தர்களுக்கு சந்நதியில் பொய் பேச தைரியம் வராது.இதன் அருகில் 300 மீ உயரமுள்ள மலையில் சிலம்புரு,நுபுரு கங்கை எனப்படும் அருவிகள் உள்ளன. மகாவிஷ்ணு மனித உருவமாக திரிவிக்ரமர் அவதாரம் எடுத்தபோது அவருடைய பாதங்களிலிருந்து இந்த அருவிகள் உருவானதாக கூறப்படுகிறது.
சிற்பக்கலைகோவிலில் உள்ள திருமண மண்டபதிலுள்ள தூண்களில் நாயக்கர்களின் சிற்பக்கலை மிளிர்வதைக் காணலாம். மதுரை மீனாட்சி கோவில் தூண்களில் உள்ளது போன்ற சிற்பங்களுடன் இங்குள்ள தூண்களும் எழிலுற காணப்படுகிறது.நரசிம்மர், கிருஷ்ணர், ரதி ஆகியோர் கிளி வாகனத்தில் அமர்ந்திருப்பது போன்றும்,கருடவாகனத்தில் விஷ்ணு அமர்ந்திருப்பது போன்றும் இங்கு சிற்பங்கள் காணப்படுகின்றன. இது மட்டுமில்லாமல், திருமலை நாயக்க மன்னர் சிலைகளும் தூண் சிற்பங்களில் காணப்படுகிறது. அசோகர் காலத்திற்கு பின்னுள்ள சிற்பங்களும் இங்கு காணப்படுகிறது.இங்குள்ள மலைக் குகைகளில் ஜைன மத குரு அஜ்ஜைனந்தி மற்றும் அவரது சீடர்கள் இங்கு தங்கியிருந்ததாக நம்பப்படுகிறது.
சித்திரை திருவிழாஅழகர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. அதில் முக்கியமானது சித்திரைப் பெருவிழாதான்.சித்திரை திருவிழாவின் போது சுந்தரராஜ பெருமாள்,கள்ளழகர் திருக்கோலம் பூண்டு மதுரைக்கு எழுந்தருளுவார். இந்த சித்திரைத் திருவிழாவுக்கு ஒரு புராணக் கதையும் உண்டு.தங்கை மீனாட்சிக்கு மதுரையில் திருமணம். ஊரே விழாக் கோலம் பூண்டு காணப்படுகிறது. தங்கையின் கல்யாணத்தைக் காண கிளம்புகிறார் அழகர் பெருமான். அவர் மதுரை எல்லையை அடைகிறார். இடையில் வைகை ஆறு. வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.ஆற்றைக் கடந்து மதுரைக்குள் செல்வதற்குள்,தங்கையின் கல்யாணம் முடிந்து விடுகிறது. இதனால் கோபமடையும் அழகர்,மதுரைக்குள் வராமல் வைகை ஆற்றோடு திரும்பி ஊருக்குச் செல்கிறார். இதை அடிப்படையாக வைத்துத்தான் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா நடைபெறுகிறது.
எப்படிப் போகலாம்?மதுரையிலிருந்து 21கி.மீட்டர் தொலைவில் அழகர் கோவில் உள்ளது. இங்கு செல்ல மிகச் சிறப்பான போக்குவரத்து வசதிகள் உள்ளன.மதுரை நகரிலிருந்து கோவிலுக்கு ஏராளமான நகரப் பேருந்துகள் உள்ளன. டாக்சி வசதியும் உண்டு. தங்கும் வசதி பெரிய அளவில் இல்லை. காலையில் கோவிலுக்குப் போய் விட்டு மாலையில் மதுரை திரும்பி விடுவது சிறப்பானது.
Published in அழகர் கோவில்திருப்பரங்குன்றம்திருப்பரங்குன்றம்மதுரைக்குத் தெற்கே, 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது,முருகனின் இரண்டாவது படை வீடான திருப்பரங்குன்றம். இது ஒரு குகைக் கோவில். ஒரே கல்லில் குடைந்த கோவிலில் முருகன் குடி கொண்டுள்ளார். அசுரனான சூரபத்மனை வதம் செய்த முருகன், இந்திரனின் மகளான தெய்வானையைத் திருமணம் செய்து கொண்டு இங்கு குடிபுகுந்தார். கோவிலின் நுழைவாயிலில் 48 தூண்கள் அமைந்த, கலை வேலைப்பாடுகளுடன் கூடிய மண்டபம் உள்ளது.Published in திருப்பரங்குன்றம்மாரியம்மன் கோயில் தெப்பக்குளம்
மாரியம்மன் கோயில் தெப்பக்குளம்மதுரையிலுள்ள மாரியம்மன் கோயில் தெப்பக்குளம் தென்னிந்தியக் கோயில் தெப்பக்குளங்களிலேயே மிகப்பெரியது. இதை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் என்கின்றனர். மதுரை மன்னராக இருந்த திருமலை நாயக்கரால் கட்டப்பட்ட இந்த தெப்பக்குளம்304. 8 மீட்டர் நீள அகலம் கொண்டது. தெப்பக்குளத்தின் நான்குபுறமும் சுமார் 15 அடி உயரத்துக்கு கல்லினால் சுவர் கட்டப்பட்டிருக்கிறது. இத நடுவில் நீராழி மண்டபம் ஒன்றும் உள்ளது. இங்கு நடைபெறும் தெப்பத் திருவிழா சிறப்புடையது.
Published in மாரியம்மன் கோவில் தெப்பக்குளம்காந்தி மியூசியம்
மகாத்மா காந்தியடிகளுக்கும், மதுரைக்கும் மிக நெருங்கிய சம்பந்தம் உண்டு. 1921ம் ஆண்டு காந்தி மதுரை வந்த போது ராம்ஜி கல்யாண்ஜி என்பவரது வீட்டில் தங்கினார். அப்போது அவர்,ஏழை மக்கள் பலர் உடுத்த சரியான ஆடையின்றி குளிரில் வாடுவதை கண்டார்.கோவணத்துடன் இருந்த ஏழை விவசாயியைக் கண்டார். அன்று இரவே, நாட்டில் இப்படியும் மக்கள் இருக்க, தனக்கு மட்டும் ஏன் இந்த் ஆடம்பரம் என்று தான் உடுத்தியிருந்த ஆடையைத் துறந்து அரை நிர்வாணத்திற்கு மாறினார் மகாத்மா.
Tuesday, 3 June 2014
Madurai Tourist Place
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment